உந்துகணைளை அனுப்புகிறது அமெரிக்கா: எச்சரிக்கிறது ரஷ்யா
உக்ரைனுக்கு மேம்பட்ட பல்குழல் பீரங்கி உந்துகணை அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குகிறது என்ற அமெரிக்காவின் முடிவு, ரஷ்யா மற்றும் நேட்டோ இடையே நேரடி மோதலின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ கூறும்போது:-
உக்ரைனுக்கான அமெரிக்க இராணுவ உதவிப் பொதியை மொஸ்கோ எதிர்மறையாகப் பார்க்கிறது. அதில் எம்-142 உயர் மொபிலிட்டி பல்குழல் பீரங்கி உந்துகணை அமைப்பு அடங்குகிறது.
உக்ரைன் நீண்டகாலமாக கோரிய ஆயுதங்கள், நீண்ட தூரத்தில் இருந்து எதிரிப் படைகளை இன்னும் துல்லியமாக தாக்குவதற்கு உதவுவதாகும்.
ரஷ்யாவின் இலக்குகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில் நீண்ட தூர பீரங்கிகளை வழங்க அமெரிக்கா இப்போது வரை மறுத்து வந்தது.
உக்ரைனுக்கு மேம்பட்ட நீண்டதூரம் சென்று தாக்கும் திறன்கொண்ட உந்துகணை அமைப்புகள் மற்றும் எறிகணைகளை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஒப்புக்கொண்டார்.