உக்ரைனுக்கு ரஷ்ய பகுதிகளை தாக்கி அழிக்கும் உந்துகணைகளை வழங்க மாட்டோம் – பிடன்
ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கக் கூடிய பல்குழல் உந்துகணைகளை அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யப் படைகள் பயன்படுத்தும் உந்துகணைகளுக்குச் சமமான நீண்ட தூரம் சென்று தாக்கும் உந்துகணைகள், மற்றும் அதற்கு தேவையான பல்குழல் உந்துகணை செலுத்திகள், சாதாராண பீரங்கிகளை காட்டிலும் 8 மடங்கு தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டதும் பல உந்துகணைகளை ஒரே நேரத்தில் செலுத்தும் ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் கோரி உள்ளது.
நீண்ட தூர பல்குழல் உந்துகணைகளை வழங்குமாறு கீவ் கோரியுள்ள போதும் அதனை வழங்கப் போவதில்லை என அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
பல்குழல் உந்துகணை குறைந்தது 73 கிலோ மீற்றர் தொடங்கம் 300 கிலோ மீற்றர் வரையில் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.
ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகே இதுபோன்ற உபகரணங்கள் வைக்கப்படும் அபாயம் உள்ளது மற்றும் உக்ரேனியர்கள் ரஷ்ய நகரங்களில் தாக்குதல் நடத்த முடியும். அத்தகைய சூழ்நிலை எங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சகித்துக்கொள்ள முடியாதது ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிடென் நிர்வாகம் கிழக்கு ஐரோப்பிய நாட்டிற்கு பல ஏவுகணை உந்துகணை அமைப்புகளை (எம்.எல்.ஆர்.எஸ்) அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரேனிய அதிகாரிகள் ரஷ்யப் படைகளை நீண்ட தூரத்தில் தாக்கவும், டொன்பாஸ் பகுதியில் அவர்களின் தாக்குதலை தாமதப்படுத்தவும் ரஷ்ய ஆயுத தளவாட மையங்கள் மற்றும் பாதைகளை அழிக்கவும் ஆயுதங்களைக் கோரியிருந்தனர்.