அரசினால் டொலரின் பெறுமதிக்கு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை! சபா குகதாஸ்
ரெலோ இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ்
இலங்கைத்தீவின் பொருளாதார வீழ்ச்சி ஏற்றுமதி வருமானங்களையும் ஏனைய அந்நியச் செலாவணி வருமானங்களையும் இழந்து மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ள போது டொலரின் பெறுமதி அதிகரித்ததுடன் ரூபாய் மிகப் பெறும் வீழ்ச்சியை அடைந்துள்ளது.
இவ்வாறான நிலையில் உள் நாட்டில் பொருட்களின் விலைகள் டொலரின் பெறுமதியை தாண்டி பன் மடங்கு அதிகமான விலைகளுக்கு விற்கப்படுகின்றது. உதாரணமாக டொலர் 200/= ரூபாவாக இருக்கும் போது 1000/= ரூபா விலையில் இருந்த சீமெந்துப் பை ஒன்று டொலர் 350/= ரூபாவாக இருக்கும் தற்போது 2850/= ரூபாவிற்கு விற்பனையாகிறது சாதாரணமாக டொலரின் பெறுமதியில் கணித்தால் 1750/= ரூபாதான் பெறுமதி ஆகவே மேலதிகமாக பெறப்படும் 1100/= ரூபாவை யார் பெற்றுக் கொள்கின்றார்கள்?