முள்ளிவாய்க்கால் சந்தையல்ல!
இறுதிப்போரின் போது இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட எமது உறவுகளை நினைவுகூருவதற்கு தமிழ் மக்கள் தயாராகிவரும் போது – மே 18 நினைவேந்தல் தினத்தை அரசியலாக்குவதற்கும், தமது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வதற்கும் சில தரப்பினர் முயற்சிப்பது அதிர்ச்சியைக்கொடுக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக பொதுக்கட்டமைப்பு ஒன்று அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்குள் அரசியல் ரீதியான தலையீடுகளை மேற்கொள்வதும், அதற்குப் புறம்பாக புதிய கட்டமைப்புக்களை உருவாக்குவதும் நீதிக்கான மக்களுடைய போராட்டத்துக்கு பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பின் பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அந்த அமைப்பால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஈழத்தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக சிங்கள இனவாத அரசாங்கம் தொடுத்த கட்டமைப்பு ரீதியான இன அழிப்பு முள்ளிவாய்க்காலில் உச்சத்தைத் தொட்டது. மக்கள் கொத்துக்கொத்தாக கொடூரமாகக் கொல்லப்பட்டதை நினைவுகூர்வதில் கூட அரசியல் முன்னிற்பது நீதியைக் கோரிப் போராடும் உறவுகளுக்கு அதிர்ச்சியைக்கொடுத்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூர்வதென்பது – நீதிக்கான போராட்டமாகவும், சிங்கள – பௌத்த அரசுகளின் நோக்கங்களை அம்பலப்படுத்துவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தைக் கோருவதற்கான ஒரு தினமாகவும் அமையவேண்டும்.
தமிழர்கள் ஒரு இன அடையாளத்தைக்கொண்டவர்கள் என்பதற்காக இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்டனர். காணாமலாக்கப்பட்டார்கள். சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். தமது பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இவை அனைத்தினதும் உச்சகட்டமாகத்தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நோக்கப்படுகின்றது. இனப்படுகொலைக்கான நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்று சர்வதேச ரீதியாகவே வலுவடைந்துவருகின்றது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் மூலம் தெளிவான சில செய்திகளை ஈழத் தமிழர்கள் சொல்லவேண்டியிருக்கின்றது.
இனப்படுகொலை ஒன்று இங்கு இடம்பெற்றிருக்கின்றது என்பதும், அதற்கான நீதி இதுவரையில் வழங்கப்படவில்லை என்பதும் இதன்மூலம் சர்வதேச சமூகத்துக்குத் தெளிவாகச் சொல்லப்பட வேண்டும். இனப்படுகொலைக்கான நீதி வழங்கப்படுவதன் மூலமாக மட்டுமே தமிழ் மக்களுடைய எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். அவர்களுடைய இருப்பை உறுதிப்படுத்த முடியும்.
மே 18 ஆம் திகதியை நினைவுகூர்வதற்காக முள்ளிவாய்;க்கால் பொதுக்கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அது வெளியிட்ட பிரகடனத்திலும் இந்தக் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நான்கு விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
1. முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டி இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த..
2. தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்குரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒரு போதும் பாரதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் தமிழர்கள் சார்பில் கோர…
3. தமிழர் இன அடையாள இருப்பின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள இனப்படுகொலையைத் தடுக்க..