November 24, 2024

வரும் வாரம் பெறுமதியானது:கொழும்பில் பரபரப்பு

இலங்கையில் எதிர்கட்சி தங்களிற்கு பெரும்பான்மையுள்ளது என தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவேண்டும் என்ற கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி பிரதமர் பதவி விலகாத பட்சத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது.

எதிர்கட்சி சுயாதீன குழுக்கள் மற்றும் அரசாங்கத்திற்குள் உள்ள சிலர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளனர் என்பதை தெரிவிப்பதில்  மகிழ்ச்சியடைகின்றேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இது அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம் இந்த ஜனாதிபதி இந்த பிரதமர் ஊழல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க நாங்கள் தயார் என தெரிவிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

21வது திருத்தத்தை நிறைவேற்றுவதே இடைக்கால அரசாங்கத்தின் முதலாவது நடவடிக்கையாக விளங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தை மீண்டும் ஏற்படுத்துவற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

12 உறுப்பினர்களை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.மத்திய குழு ஆதரவளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவிவிலகாவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளும் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு, அவர்கள் வெளியிலிருந்து ஆதரிக்ககூடாது அது பொறுப்புள்ள நடவடிக்கையில்லை புதிய பிரதமரே ஒரே வழி என்பது எனது கருத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் அதிருப்தியாளர்களிற்கும் இடையி;லான பேச்சுவார்த்தைகளின் பின்னர் மே 3 ம் திகதி நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற் ஆதரவளிப்பார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளதாக உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியில் 65 பேர் உள்ளனர் 42 பேர் அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ளனர்-மூவர் திரும்பி சென்றுவிட்டனர் ஏனையவர்களை வைத்துபார்க்கும்போது 104 பேர் உள்ளனர் சுதந்திரக்கட்சியில் பத்துபேர் உள்ளனர் – 114 இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமானது என அவர் தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லீம்களில் மூவர் திரும்பிவந்துவிட்டனர்-இதனால் 117 பேர் உள்ளனது இது தவிர டலஸ் அலகபெரும ,சரித்த ஹேரத், நாலக்க கொடவக்கேயின் ஆதரவும் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert