November 24, 2024

பாடசாலைகள் முடங்கின

 இன்று திங்கட்கிழமை ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் கற்றல் செயற்பாடுகள் முடங்கியுள்ளது

விலையேற்றமும் குடும்ப பொருளாதார நிலையும் மாணவர்களின் வரவையும் கணிசமாக பாதித்துள்ளன. அத்துடன், தூர பிரதேசங்களுக்கு சென்று கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் பொருளாதார நெருக்கடிகளை மட்டுமின்றி, குடும்பச் சுமைகளுடன் போக்குவரத்து சிரமங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழலில் கடமைகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளன. வரிசையில் நின்றே நாட்டு மக்கள் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

கஷ்ட – அதிகஷ்ட பிரதேசங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் – எரிபொருள் தட்டுப்பாடான இன்றைய சூழலிலும் – விரல் அடையாள இயந்திர நடைமுறைகளால் தொழில் ரீதியாகவும் – உளவியல் ரீதியாகவும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

எனவே, இவற்றுக்கு உடனடித் தீர்வை அரசாங்கம் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (இன்று) நடைபெறும் சுகயீன லீவு போராட்டத்தில் அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுவர். எனவே, மாணவர்களின் பெற்றோர்கள் வீணான சிரமங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்ராலின் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert