உயிர்த்த ஞாயிறு தாக்குதல்:பரிசுத்த பாப்பரசர் விசேட பிரார்த்தனை!
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நாளை விசேட பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளார்.
வத்திக்கானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் ஆயர்கள் மற்றும் உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகளில் சிக்கி காயமடைந்தவர்களுடன் இணைந்து பரிசுத்த பாப்பரசர் நாளை விசேட ஆராதனையை முன்னெடுக்கவுள்ளார் என கர்தினால் மல்கம் ரஞ்சித்;தெரிவித்துள்ளார்.
வத்திக்கானிற்கு சென்றுள்ளவர்கள் விசேட ஆராதனையின் பின்னர் பரிசுத்த பாப்பரசரை சந்திப்பார்கள் என கர்த்தினால் தெரிவித்துள்ளார்.
இது அரசியல் நிகழ்வில்லை-இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெறும் ஆராதனை மாத்திரமே நாங்கள் அவர்களின் நிலைமையை உலகிற்கு காண்பிக்கவிரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
பலவிடயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் உண்மையை அறிவதற்காக சர்வதேச சமூகத்தின் உதவியை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.