உக்ரைனுக்கு 100 மிஸ்ட்ரல் ஏவுகணைகளை வழங்குகிறது நோர்வே
உக்ரைனுக்கு நோர்வே 100 பிரஞ்சுத் தயாரிப்பான மிஸ்ட்ரல் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
மிஸ்ட்ரல் ஒரு மிகக் குறுகிய தூரம் தரையிலிருந்து வானுக்கு ஏவும் ஏவுகணையாகும். இது வாகனங்கள் மற்றும் கல்பல்கள் மற்றும் உலங்கு வானூர்திகளிலும் பயன்படுத்தலாம். இது மிகச் சிறய தோற்றம் கொண்டது.
ஏவுகணை நோர்வே இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற உள்ளது. ஆனால் அது இன்னும் ஒரு நவீன மற்றும் திறமையான ஆயுதமாகும்.
இது உக்ரைனுக்கு பெரிதும் பயன்படும் என்று நோர்வே பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ன் அரில்ட் கிராம் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அத்துடன் மற்ற நாடுகளும் இதேபோன்ற ஆயுத அமைப்புகளை நன்கொடையாக வழங்கியுள்ளன என்று அவர் கூறினார்.
ப்ரவரி 24 அன்று ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, நோர்வே ஏற்கனவே உக்ரைனுக்கு சுமார் 4,000 டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் பிற சிறிய இராணுவ உபகரணங்களை வழங்கியுள்ளது.