காலிமுகத்திடலில் படைகுவிப்பு!
காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டகளத்தை சூழ இலங்கை படைகள் குவிக்கப்பட்டுவருகின்ற நிலையில் அச்சம் தோற்றியுள்ளது.
அமைதி வழி போராட்ட களத்தை சூழ படையினரது குவிப்பு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
இதனிடையே காலிமுகத்திடலில் இடம்பெறும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடுநிலைமையானவையாக காணப்பட்டால் நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக காணப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
அரசியல்கட்சிகள் மக்கள் போராட்டத்திற்கு உரிமை கோரமுயல்கின்றன என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டிற்கு சாதகமான விடயங்களை கோருகின்றனர் அரசியல்களால் அவர்கள் பிளவுபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றிய பல தருணங்கள் உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நபர்களை ஜனாதிபதிகளாகவும் அரசாங்கமாகவும் மக்கள் தெரிவுசெய்தனர் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் தற்போது மாற்றத்தை கோருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.