ராஜபக்சக்கள் இல்லாத அமைச்சரவை:பேச்சே வேண்டாமென்கிறார் கோத்தா!
ராஜபக்ச குடும்பத்தவர்களை உள்ளடக்காத இடைக்கால அரசாங்கத்தை சுதந்திரக்கட்சி முன்மொழிந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோத்தபாய சுதந்திரக்கட்சியை உடைக்க தொடங்கியுள்ளார்.
சுதந்திரக்கட்சியின் ஆலோசனைகளை கோத்தா நிராகரித்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளதாக சுதந்திரகட்சியின் சிரேஸ்ட துணைத்தலைவர் ரோகன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கட்சியிலிருந்து வெளியேறி கோத்தாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக தற்போதைய அரசியல் முட்டுக்கட்டை நிலைக்கு தீர்வை காண்பதற்காக முன்னர் அரசாங்கத்தில் அங்கம் வகித்த 11 கட்சிகளும் சுhயதீன நாடாளுமன்ற குழுவினரும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்
அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி குறிப்பிட்ட காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனைiயை பிரதானமாக முன்வைத்தன.
இடைக்கால அரசாங்கத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் எவரும் இடம்பெறக்கூடாது என்ற யோசனையையும் முன்வைக்கப்பட்டது.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை கண்டபின்னர் ஜனநாயக தேர்தல் குறித்து யோசனையையும் முன்வைக்கபட்டது.எனினும் ஜனாதிபதி கோத்தபாய இதனை நிராகரித்துள்ளார் .