November 21, 2024

கோத்தா வீடு செல்லும் காலம் நெருங்கிவிட்டது:ஏபி செய்தி சேவை

நெருக்கடிகள் அதிகரிக்கின்ற நிலையில்  இலங்கையின் தலைவர் பதவி விலகவேண்டும் என்ற அழுத்தமும் அதிகரிக்கின்றதென அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் கிருஸ்ணன் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள் படும் துயரங்களை பார்க்கும்போது ஜனாதிபதிக்கு வாக்களித்ததன் மூலம் என்ன பாவம் செய்துவிட்டேன் என வருந்துகின்றேன் என சிங்கள பொதுமகன் ஒருவர் தெரிவித்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாடுகள் காரணமாக சீற்றம் குழப்பநிலையும் தீவிரமடைந்துவரும் நிலையில் கடனில் சிக்கியுள்ள நாட்டின் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோருவதற்காக் சனிக்கிழமை கொழும்பின்  முக்கிய வர்த்தக பகுதியில்  ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் அணிதிரண்டாhர்கள்,எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக மதகுருமார் கொழும்பை நோக்கி பேரணியாக சென்றார்கள்.

தேசிய கொடியையும் பதாகைகளையும் ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்-சிலர் தமது துன்பங்களை பாடல்கள் மூலம் புலம்பினார்கள்-நெருக்கடியை மோசமாக கையாண்டமைக்காக ஜனாதிபதியையும் அவரது நிர்வாகத்தையும் குற்றம்சாட்டினார்கள்.

அவரது அமைச்சரவையின் அனேக உறுப்பினர்கள் பதவி விலகிய பின்னரும்,அவருக்கு விசுவாசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக மாறிய பின்னரும் பதவி விலகுவதில்லை என்பது குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மிகவும் உறுதியாக காணப்படுகின்றார்,

ராஜபக்சாக்கள் வீட்டிற்கு செல்லுங்கள்  எங்களிற்கு பொறுப்பான தலைமைத்துவம் தேவை போன்ற வாசகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்தனர்.

தங்களை சமூகஊடகங்கள் வாயிலாக ஒருங்கிணைத்துக்கொண்ட எந்த அரசியல் தலைமைத்துவத்தையும் ஏற்றுக்கொள்ள தயாரில்லாத ஆயிரக்கணக்கான இளைஞர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

நீங்கள் தவறான தலைமுறையுடன் மோதியுள்ளீர்கள் என தெரிவிக்கும்  வாசகங்களை அவர்கள் வைத்திருந்தனர்.

ஜனாதிபதியின் அலுவலகத்தை சுற்றி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள்  தங்கள் நோக்கம் நிறைவேறும் வரை அங்கிருந்து வெளியேறப்போவதில்லை என தெரிவித்தனர்.

பல மாதங்களாக இலங்கை மக்கள் சமையல் எரிவாயுவிற்காகவும் எரிபொருளிற்காகவும் உணவு மற்றும் மருந்திற்காகவும் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்,இவற்றில் அனேகமானவை வெளிநாட்டிலிருந்தே வருகின்றன- இவற்றிற்கான பணத்தை டொலரில் செலுத்தவேண்டும்

அடுத்த ஐந்து வருடங்களி;ல 25 மில்லியன் டொலர் கடனை செலுத்தவேண்டிய நிலையில் உள்ள-இந்த வருடம் மாத்திரம் ஏழுமில்லியன் டொலரை செலுத்தவேண்டிய நிலையில் உள்ள- அந்நியசெலாவணி கையிருப்புகள் வேகமாக முடிவடையுட்  இலங்கை வங்குரோத்து ஆபத்தை எதிர்கொள்கின்றது.

சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இம்மாத பிற்பகுதியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது-உணவு மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான அவசர கடனிற்காக அரசாங்கம் சீனா இந்தியாவி;ன் உதவியை நாடியுள்ளது.

அதிகரித்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிப்படுத்தும் அனேக கோபங்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் நோக்கியவையாக காணப்படுகின்றன-ராஜபக்ச அவரது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்ச – மகிந்த ராஜபக்ச இரண்டு தசாப்தங்களாக அதிகாரத்தில் உள்ள ஒரு செல்வாக்குமிக்க குலத்தின் தலைவராக காணப்படுகின்றார்.இந்த குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்களில் மூவர் கடந்த வாரம் பதவியை இராஜினாமா செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 35 வயது சட்டத்தரணி தக்சில ஜெயசிங்க  2019 ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களித்தமைக்காக வேதனைப்படுகின்றேன் என தெரிவித்தார்.

மக்கள் படும் துயரங்களை பார்க்கும்போது ஜனாதிபதிக்கு வாக்களித்ததன் மூலம் என்ன பாவம் செய்துவிட்டேன் – என வருந்துகின்றேன் என அவர் தெரிவித்தார்.

சமையல்எரிவாயுவையும் மண்ணெண்ணையும் பெறுவதற்காக நீண்டநேரம் வரிசையில் நின்ற நான்குபேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

260 பேரைகொலை செய்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொருத்தமானவர் கோத்தபாய ராஜபக்ச என கருதியே அவருக்கு வாக்களித்தேன் என ஜெயசிங்க தெரிவித்தார்.

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய  உள்ளுர் முஸ்லீம் குழுவினர் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்படும் இந்த தாக்குதல் – கொரோனா பெருந்தொற்றுடன் உள்நாட்டின் சுற்றுலாத்துறையை செயல் இழக்கச்செய்துள்ளது-இதன் மூலம்இலங்கைக்கு அந்நியசெலாவணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளன.

இதேவேளை எந்த வருமானத்தையும் ஈட்டித்தராத கொழும்புதுறைமுக நகரம் போன்றவற்றை உருவாக்குவதற்கான நிதிக்காக ராஜபக்ச குடும்பம் பெருமளவு கடன்களை பெற்றது – சீன கடன் என விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கத்தோலிக்க மதகுருமாரும் கத்தோலிக்க மக்களும் நீர்கொழும்பில் உள்ள தியாகிகள் மயானத்திலிருந்து பேரணியாக கொழும்பை வந்தடைந்தனர்.உயிர்த்தஞாயிறு தாக்குதல் சென்செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்றவேளை கொல்லப்பட்ட 100பேரின் உடல்கள் தியாகிகள் மயானத்திலேயே காணப்படுகின்றது.

பொருளாதார தோல்விகளிற்காகவும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கு அரசாங்கம் தவறியமைக்கு எதிராகவும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று நாட்டிற்கு பாரிய மாற்றமும் புதிய ஆரம்பமும் தேவையாகவுள்ளது என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தார்.

நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் முன்வந்து இந்த அமைப்பு முறையை மாற்றவேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்-ஒன்றிணைந்து இவர்களை அதிகாரத்திலிருந்து செல்லுமாறு கேட்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert