கோத்தா கொலை கும்பலை தடுத்தமைக்கு விசாரணை!
கோத்தபாயவின் இலக்கதகடற்ற விசேட கொலைக்கும்பலை தடுத்த இலங்கை காவல்துறை மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நாடாளுமன்றிற்கு அருகில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த படையினரை காவல்துறை தடுத்து நிறுத்தியது குறித்து உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றவேளை மோட்டார் சைக்கிளில் வந்த படையினருக்கும் அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல்நிலை குறித்து காவல்துறை மா அதிபர் உடனடி விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த படையினரை தடுத்து நிறுத்திய இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களின் ஒழுக்கவிதி முறைகளிற்கு மாறானதவறான நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு இராணுவ தளபகி காவல்துறைமா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோன்று பாதுகாப்பு அமைச்சரின் செயலாளரும் இந்த சம்பவம் குறித்து காவல்துறைமா அதிபருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் அறிவித்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகளின் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
வுடகிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சட்டவிரோத கொலைகளை வழிநடத்தியவர்கள் கோத்தபாயவின் இலக்கதகடற்ற விசேட கொலைக்கும்பல் என்பது குறிப்பிடத்தக்கது.