November 21, 2024

300 சட்டத்தரணிகள்:முன்னுதாரணமான சிங்களம்!

மிரிஹான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்காக, 300 சட்டத்தரணிகள், மிரிஹான பொலிஸில் ஆஜராகியிருந்தனர். எவ்விதமான கட்டணங்களும் இன்றி, சுய விருப்பத்தின் பேரில், சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் விசாரணைக்குப் பின்னர், சந்தேகநபர்கள் அனைவரும் பஸ்ஸில் ஏற்றப்பட்டு, நுககேகொடை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

சந்தேகத்தின் பேரில் 34 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நேற்றைய தினம் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன்போது, அங்கு ஜனாதிபதி இருந்தாரா என்பது தொடர்பிலான தகவல்களை தன்னால் வெளியிட முடியாது என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அரச தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் நடமாட்ட விடயங்களை பொதுவெளியில் வெளியிடுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்றும் அவ்வாறு வெளியிடுவது சரியான விடயம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert