தரை,கடல் முடிந்து தற்போது ஆகாயம் விற்பனையில்!
நிபந்தனையின்படி நாட்டின் வான்வெளியை இந்தியா விரும்பியபடி பயன்படுத்த அனுமதித்துள்ளதாகவும் இந்தியாவுடனான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி ஒப்பந்தம் பல கடுமையான நிபந்தனைகளின் கீழ் கையெழுத்திட்டப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
பல கடுமையான நிபந்தனைகளின் கீழ் இந்தியாவுடனான 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தம் கையெழுத்திட்டப்பட்டதாகவும் நபந்தனைகளின்படி, இலங்கையின் வான்வெளியில் இந்தியா தடையற்ற அணுகலைக் கொண்டிருக்கும் என்றார்.
ஒப்பந்தத்தில் ஆடம்பரமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அந்த நிபந்தனையின்படி நாட்டின் வான்வெளியை இந்தியா விரும்பியபடி பயன்படுத்த அனுமதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
உலகில் வேறு எந்த நாடும் இவ்வாறான உடன்படிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும், இந்த உடன்படிக்கை நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
இலங்கையின் வான்பரப்பை தடையின்றி பயன்படுத்த இந்தியாவை அனுமதிக்கும் பிரேரணைக்கு கடந்த மார்ச் மாதம் 3ஆம் திகதி அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.