நீதிபதி வீட்டில் கொள்ளையிட்ட பிக்குகள்!
அம்பாறை அக்கரைப்பற்றில் நீதவான் ஒருவரின் வீடு உட்பட பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பலை சேர்ந்த சேர்ந்த இரு பௌத்த தேரர்கள் உட்பட 8 பேரையும் எதிர்வரும் ஏப்பிரல் முதலாம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (25) உதத்தரவிட்டார்.
அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 3 வீடுகளிலும் டிசம்பர் 18ம் திகதி நள்ளிரவு நீதவான் வீட்டிலுமாக ஒருமாதத்தில் 4 வீடுகளின் யன்னல்களை கழற்றி உள் நுழைந்த கொள்ளைக் கும்பல் நித்திரையில இருந்த குடும்ப பெண்களின் கழுத்தில் இருந்த சுமார் 60 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து விசேட பொலிஸ் குழுவினர் பெப்பிரவரி 9ம் திகதி இரு பௌத்த தேரர்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதுடன் நீதவான் வீட்டில் கொள்ளையிட்ட தாலிக்கொடி உட்பட 55.5 பவுண் தங்க ஆபரணங்கள மீட்டதுடன் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர்களின் வழக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (25) விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இவர்களை எதிர்வரும் 1 ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை பிரதான சூத்திரதாரி பாதாள கோஷ;டி தெமட்டகொடை சமந்தவின் கையாளான குணா அல்லது சத்தியா என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை சேர்ந்த குணசீலன் மற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தம்பி ஓடாவி ஆகிய இருவரும் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.