Mai 12, 2025

எல்லாமுமே ஆமி மயம்?

இலங்கையின்  வன்னியிரல் எரிபொருள் விநியோகத்தில் படையினர் முழுமையாக சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி, மாங்குளம், ஒட்டுசுட்டான், முள்ளியவளை, முல்லைத்தீவு, நாயாறு, பதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு மற்றும் துணுக்காய் ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவப் பிரசன்னத்துடனேயே எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகிறது.

இராணுவத்தினரால் வாகன இலக்கத் தகடுகள் பதியப்பட்ட பின்னரே எரிபொருள் வழங்கப்படுகின்றது.

வடக்கில் இலங்கை அரசு சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் படையினரை பெருமளவு ஈடுபடுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert