ஆள் வரவேண்டாம்:காசு மட்டும் கோத்தாவிற்கு வேண்டுமாம்!
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் முதலீடு செய்யுமாறு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்களத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலாண்டை நேற்று (23) சந்தித்தபோதே ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
நேற்றைய சர்வகட்சி மாநாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அதன் முன்னேற்றம் மற்றும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல்கள் குறித்து கோட்டாபய ராஜபக்ச நூலந்திடம் விளக்கினார்.
இந்நடவடிக்கையைப் பாராட்டிய அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களுடன் பேச்சுக்களை நடத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு ஆர்வமாக உள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.