ஐரோப்பாவுக்கு வழங்கும் எரிவாயுவுக்கு ரூபிளே செலுத்த வேண்டும் – புடின்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்படும் ரஷ்ய எரிவாயுவை ரஷ்ய நாணயமான ரூபிள்களில் செலுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் அரசாங்க கூட்டத்தில் கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:-
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எரிவாயு விநியோகத்திற்காக டொலர்கள் அல்லது யூரோக்களில் பணம் செலுத்துவதை ரஷ்யா இனி ஏற்காது என்றார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதிய ரூபிள் முறையை செயல்படுத்த ரஷ்ய அதிகாரிகளுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளார்.
எதிரியான நாடுகளுக்கு வழங்கப்படும் எங்கள் எரிவாயுவை ரூபிள்களில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளின் தொகுப்பை செயல்படுத்துவதற்கான முடிவை நான் எடுத்துள்ளேன் என்று புடின் அரசாங்க கூட்டத்தில் மேலும் கூறினார்.