November 21, 2024

கூட்டமைப்பினருக்கு மானம் ரோசமில்லையா?

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக எதையும் இதுவரை பேசாதவர்கள் இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு ஏன் முண்டியடிக்கின்றனர் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இத்தகையவர்கள் இலங்கை ஜனாதிபதிக்கு வெள்ளையடிக்கும் சந்திப்பிற்கு செல்லக்கூடாது எனவும் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது

யாழ்  ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக  சந்திப்பில் கருத்து வெளியிட்ட சங்க பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கான இரண்டு நாள் விஜயமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச வருகை தந்திருந்த வேளை அவரிற்கு எமது எதிர்ப்பை தெரிவிக்க நாங்கள் போராட்டத்திற்கு சென்றிருந்தோம்.

ஆப்போது எங்களை இலங்கை இராணுவத்தினர்,அதிரடிப்படையினர் மற்றும் பொலீசார் இணைந்து எங்களை வழிமறித்து தாக்கி காயப்படுத்தியிருந்தார்கள்.இன்றோ நாளையோ என பிள்ளைகளது பிரிவுடன் மரணத்திற்கு போராடும் வயோதிபர்களான் எங்களை தாக்கியுள்ளனர்.

இத்தகைய சம்பவங்கள் இடம் பெற்ற போதும் தம்மை மக்கள் பிரதிநிதிகள் என சொல்லிக்கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள் எவரும் நம்மை எட்டிக்கூடப்பார்க்கவில்லை அதுமட்டுமன்றி மனித உரிமை அமைப்புக்கள்,அரச சார்பற்ற பெண்கள் அமைப்புகள் ,பொது அமைப்புக்கள், மக்களுக்காக செயல்படுவதாக கூறிக்கொண்டு வயிறு வளர்ப்பவர்கள் எவரும் எங்களை கண்டுகொள்ளவில்லை.

எங்கள் மீது தாக்குதல்  இடம்பெற்றமை தொடர்பில் எத்தகைய கண்டனங்களை இன்று வரை அவர்கள்; விடுக்கவுமில்லை.நாங்கள் வயது போன நிலையிலும எமது உறவுகளைத் தேடி போராடி வருகின்றோம். அவ்வாறான நிலையில் எங்களுக்காக ஆதரவாக ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை என சந்தேகம் வருகின்றது.

அரசியல் கட்சிகள் ,மக்கள் பிரதிநிதிகள் ,எங்களுக்காக  எவரும் குரல் கொடுக்கவில்லை.பல பெண்கள் அமைப்புகள் மக்களுக்காக பாடுபடுவதாக கூறிக்கொண்டிருப்பவர்கள் எங்கள் துயரத்தில்  பணத்தை பாரப்;பவர்கள் என எவருமே  எமக்காக குரல் கொடுப்பதில்லை. தென்னிலங்கையில் உள்ள  பெண்கள் அமைப்புக்கள் பெண்களுக்கு எது நடந்தாலும் உடனே குரல் கொடுத்து ஆர்ப்பாட்டங்களை செய்வார்கள். வடக்கில் அவ்வாறு இல்லை. இந்த நிலையில் மாற்றம் வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் என கூறிக்கொள்பவர்கள் எங்கள் பிரச்சினைகளை பற்றி கலந்துரையாட வேண்டும். தமிழ்தேசியகூட்டமைப்பினர் பின்கதவால் தங்களிற்கு சலுகைகளை பெற்றுக்கொள்ள,  தங்கள் சுகபோகத்திற்காக இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடலுக்கு செல்லக்கூடாது எனவும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert