November 23, 2024

மாமனிதர் நாகலிங்கம் ஐயா 7 வது நினைவலைகளுடன்!!

16.03.2022
மாமனிதர் நாகலிங்கம் ஐயா ஐந்தாவது நினைவலைகளுடன்!!
தமிழர் தாயகத்தில்
கல்லடி வேலுப்பிள்ளை
வாழ்ந்த பதி வசாவிளான்
மண்ணில் உதித்த
எங்கள் தமிழ்ப்பரிதி
நாகலிங்கம் தாத்தா
அவர்கள்!!
புலம்பெயர்ந்து ஜெர்மன்
மண்ணில் குடி கொண்ட
தமிழ்க்குழந்தைகள்
உள்ளம் சொல் செயலால்
தமிழ்மணம் பரப்ப எண்ணி
அல்லும் பகலும் அலைந்து
அரும்பாடுபட்டு தமிழ்க்கூடங்கள்
நிறுவி தமிழ் வளர்த்த
தந்தை எங்கள் தாத்தா!
இவரது தமிழ்த்தியாக
மேன்மையால் எம்
தேசியத்தலைவர் அவர்களால்
மதிப்பளிப்பு செ்யப்பட்ட
பெருவளத்தான் !!
தங்கத்தாத்தா நாகலிங்கம்
காட்டிய வழியினில்
நம் தலைமுறைகள்
ஒழுக வேண்டியதே
நாம் அவர்க்குச் செய்யும்
உபகாரம்!!
அன்னாரின் நினைவலைகள்
என்றும் நிலைத்து நிற்கும்
தமிழுள்ளங்களில்
ஓம் சாந்தி!சாந்தி!சாந்தி!

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert