முன்னணியின் பேரணி வவுனியாவில்!
13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் அணியால் இன்று வவுனியாவில் எழுச்சி பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பேரணியானது வவுனியா பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக மாவீரர் ஒருவரின் சகோதரன் ஈகைச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து பிற்பகல் 2. 30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
ஏ9 வீதி வழியாக சென்று தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டு கழக மைதானத்தில் பேரணி நிறைவுற்றது. கிட்டு பூங்கா பிரகடனம் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் எஸ். தவபாலன் வாசிக்கப்பட்டதுடன் சிறப்புரைகள் இடம்பெற்றிருந்தது.
13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த தினங்களில் வவுனியாவில் வாகனப்பேரணியினையும் மக்கள் சந்திப்புக்களையும் முன்னெடுத்திருந்த நிலையிலேயே இன்று பேரணி இடம்பெற்றது.
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அனைத்து தமிழ் மக்களும் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (கஜேந்திரகுமார் அணி வலியுறுத்தி வருகின்றது.
குறித்த பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசியப்பட்டியல் செ.கஜேந்திரன் மற்றும் கட்சியினது சட்ட ஆலோசகர் காண்டீபன், ஊடக பேச்சாளர் சுகாஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என கலந்து கொண்டிருந்தனர்.