கோத்தா ஜனாதிபதி :ரணில் பிரதமர்!
இலங்கையில் ஏப்ரல் புதுவருடத்திற்கு முன்னாள் தேசிய அரசாங்கமொன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி அங்கம் வகிக்கும் தேசிய அரசாங்கமொன்றே உருவாகவுள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு அவசியமாகவுள்ள பாரிய சர்வதேச உதவியை பெறும் நோக்கத்துடனேயே தேசிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிப்பார் பசில் ராஜபக்ச தொடர்ந்தும் நிதியமைச்சராக பதவி வகிப்பார் என தெரியவருகின்றது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் 15 உறுப்பினர்களுடன் ரணில் விக்கி;ரமசிங்க தேசிய அரசாங்கத்தில் இணைவார்,ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு இடமளிக்கும் வகையில் பொதுஜனபெரமுனவின் ஐந்து தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலக்கிக்கொள்வதற்கு பசில் இணங்கியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.