November 21, 2024

சிங்கள தேசமும் ஜெனீவாவிற்கு காவடி!

கோத்தபாயவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து மாலபேயில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்த்ரவின் வீட்டுக்கு முன்பாக நேற்று முன்தினம் (05) இரவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக்கோரி, ஹிருணிகா தலைமையிலான ஐக்கிய பெண்கள் சக்தியினர் மீரிஹானயில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப்போராட்டம் நடைபெற்ற சில மணி நேரங்களுக்குப் பின்னர், ஹிருணிகாவின் வீட்டுக்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்பாக தான் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் தனது வீட்டுக்கு முன்பாக போராட்டம் நடைபெற்றதாக ஹிருணிக்கா தெரிவித்துள்ளதோடு, வீட்டில் உள்ள தனது பிள்ளைகள் மூவருக்கும் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டாலும் இந்த விவகாரத்தை ஜெனிவா போன்ற சர்வதேச சமூகத்துக்கு எடுத்துச் செல்ல தான் தயங்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியின் மீரிஹான இல்லத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் காரணமாக குற்றவியல் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியிடம் கேள்வி கேட்பதற்காகவே நாம் அங்கு சென்றிருந்தோம். தேவையற்ற செலவுகளாலேயே நாட்டில் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆண்களை விட முதுகெலும்பு வலுவாக உள்ள பல பெண்கள் தங்களுடையப் போராட்டத்தில் இணைந்துகொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert