November 22, 2024

உக்ரைன் என்ற நாடு அதன் அந்தஸ்தை இழக்க நோிடலாம் புடின் எச்சரிக்கை

உக்ரைன் தேவையற்ற செயல்களைச் செய்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.  இதை அவர்கள் தொடர்ந்தால் உக்ரைன் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.  ரஷ்யாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன.  இது கிட்டதட்ட ரஷ்யாவுக்கு எதிராகப் போரை அறிவிப்பதற்குச் சமமானவை.  இந்தப் பொருளாதாரத் தடைகளால் ரஷ்யா பாதிக்கப்படவில்லை‘ என்று அவர் தெரிவித்தார்.

11 நாளாகத் தொடரும் போர்

தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை 11 வது நாளாகத் முன்னெடுத்துள்ளது. பொதுமக்கள் நகரங்களில் அதிகமாக இருப்பதால் ரஷ்யாவின் முன்னகர்வு எதிர்பார்த்ததை விட தாமதமாகவே நகர்கின்றது. உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலிலும் ரஷ்ய படைகள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்

இப்போரில் உக்ரைன் மக்கள் 1.5 மில்லியன் மக்கள் ஐரோப்பிய எல்லை நாடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

11,000 ரஷ்யப்படையினர் பலி!

போரில் 11,000 ரஷ்யப் படையினர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தரப்பினர் தெரிவித்துள்ளனர். உக்ரைன் நடத்திய தாக்குதலில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்யப் படையினர் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் உக்ரைன் தரப்பில் எத்தனை படையினர் கொல்லப்பட்டனர் மற்றம் படைத்துறை இழப்புக்களை எதனையும் அவர்கள் வெளியிடப்படவில்லை.

பொதுமக்களை மனிதக் கேடயங்களாக உக்ரைன் படையினர் பயன்படுத்துகின்றனர்

பொதுமக்களை ரஷ்யப் படையினர் குறிவைக்கவில்லை என்றும் ஆனால் தண்ணீர் இன்றியும், உணவின்றியும் ஏராளாமானோர் தவித்து வரும் நிலையில், மக்களை வெளியேற விடாமல் உக்ரைன் படையினர் தடுப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. உக்ரைன் படையினர் பொதுமக்களை மனிதக் கேடங்களாகப் பயன்படுத்துவதாக ரஷ்யா தெரிவிக்கிறது.

ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர் வங்கி அட்டைகள் நிறுத்தம்

இன்று ரஷ்யாவில் பயன்படுத்தப்படும் அமெரிக்க விசா, மாஸ்டர் வங்கி அட்டைகள் சேவைகளை நிறுத்தியுள்ளன. 

ரஷ்யாவில் வரவிருக்கும் நாட்களில் விசா கார்டு பரிவர்த்தனைகள் துண்டிக்கப்படும் என விசா நேற்று கூறியது.  விசா கார்டுகள் தடை செய்யப்பட்டவுடன் ரஷ்யாவில் வழங்கப்பட்ட கார்டுகள் வெளிநாட்டில் வேலை செய்யாது. வெளிநாட்டில் வழங்கப்பட்ட கார்டுகள் ரஷ்யாவிற்குள் வேலை செய்யாது என அறிவித்துள்ளது.

இதேபோல், உக்ரைன் மீதான ரஷ்ய போர் அதிர்ச்சியூட்டும் மற்றும் பேரழிவு தரக்கூடியது எனக்கூறிய மாஸ்டர்கார்டு, விசாவைப் போலவே மாஸ்டர்கார்டு தடையும் இருக்கும் என அறிவித்தது.

ரஷ்ய வங்கிகளால் வழங்கப்படும் கார்டுகள் இனி மாஸ்டர்கார்டு நெட்வொர்க்கால் ஆதரிக்கப்படாது. நாட்டிற்கு வெளியே வழங்கப்படும் எந்த மாஸ்டர்கார்டும் ரஷ்ய வணிகர்கள் அல்லது ஏ.டி.எம்.களில் வேலை செய்யாது என தெரிவித்துள்ளது.

மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குகிறது ரஷ்யா இங்கிலாந்து குற்றச்சாட்டு

உக்ரைனில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை குறி வைத்தே ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக கூறியுள்ள இங்கிலாந்து, செச்செனியா, சிரியாவில் கையாண்ட போர் தந்திரங்களை உக்ரைனிலும் ரஷ்யா கையாள்வதாக தெரிவித்துள்ளது.

மக்கள் அதிகம் வசிக்கும் கிவ், செர்னிகிவ், கார்கீவ் போன்ற நகரங்களை தான் ரஷ்யா குறிவைத்து தாக்குகிறது என இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது.

எதிர்தரப்பு படைகளின் மன உறுதியை உடைக்கும் வகையில் இந்த தந்திரங்களை ரஷ்யா கையாள்கிறது என இங்கிலாந்து உளவுத்துறை கூறியுள்ளது.

மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இங்கிலாந்து கூறும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

சுற்றுப்புறத்தில் இருந்து ஆக்சிஜனை உறிஞ்சி அதிக வெப்பநிலையுடன் வெடிக்கும், மனித உடல்களை ஆவியாக்கும் மோசமான தன்மை கொண்ட வேக்யூம் வெடிகுண்டு எனப்படும் தெர்மோபரிக் ஆயுதத்தை செச்செனியா, சிரியாவில் ரஷ்யா பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert