இலங்கை:வங்கியில் டொலர் 240?
இலங்கைக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்து வதற்கான யோசனை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித் துள்ளார்.
சிங்கள – தமிழ் புத்தாண்டைக் கொண்டாட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இலங்கை யிலுள்ள தங்கள் குடும்பங்களுக்கு செலவு செய்ய அதிக பணம் அனுப்புவது வழக்கம்.
எவ்வாறாயினும், இலங்கையில் டொலர் நிலைமையின் தற்போதைய சூழலில், பல வெளிநாட்டு தொழிலாளர்கள் சட்டவிரோதமான வழிகள் மூலம் தமது பணத்தை இலங்கைக்கு அனுப்புகின்றனர். இந்நிலையால், நாட்டின் அந்நியக் கையிருப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்த பட்சம் 240 ரூபாவை செலுத்தினால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தமது பணத்தை உள்ளூர் வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்ப முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, தற்போது ஒரு டொலருக்கு வழங்கப்படும் 10 ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவை மேலும் 30 ரூபாவால் அதிகரிக்க அமைச்சர் அமைச்சரவைக்கு முன்மொழிவார் என தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.