ரஷ்ய இராணுவம் குறித்து போலிச் செய்தி வெளியிட்டால் 15 ஆண்டு சிறை!!
உக்ரைன் மீது கடந்த 10 நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு எதிராக உக்ரைன் முறியடிப்புத் தாக்குதல்களை நடத்துகிறது.
இப்போர் குறித்து சமூக ஊடங்கள் முதல் மேற்குல ஊடகங்கள் ரஷ்ய படைகள் குறித்து போலிச் செய்திகளை வெளியிட்டு வருவதால் அதனைத் தடுக்க ரஷ்ய நாடாளுமன்றில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் ரஷ்யப் படைகள் குறித்து போலிச் செய்திகள் வெளியிட்டால் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேபோன்று ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் கொண்டு வருவதற்கு அழைப்பு விடுத்தவர்களுக்கும் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.