பஸில் விமல் போட்டுப்பிடிப்பு!
இலங்கையின் ஆளும் பொதுஜனபெரமுனவின் பங்காளி சண்டை உச்சமடைந்துள்ளது.ஆளாளுக்கு திட்டிக்கொள்வதில் பங்காளிகள் முனைப்பாகியுள்ளனர்.
மகிந்தவின் மீது சேறுபூசி அவரது கதிரையை கைபற்ற பஸில் முற்பட்டுள்ளார்.இந்நிலையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டின் பொருளாதாரத்தை கையாளும் விதம் குறித்து அமைச்சர் விமல்வீரவன்ச கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி காணப்படுகின்ற போதிலும் நிதியமைச்சர் மத்தியவங்கி ஆளுநருடன் கடந்த ஆறு மாதங்களாக நேரடி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் தான் நிதியமைச்சிற்கு ஒன்பது முறை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் எனினும் எந்த பதிலும் இல்லை என தெரிவித்துள்ளார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநர் பல யோசனைகளை முன்வைத்த போதிலும் எந்த பதிலும் இல்லை என தெரிவித்துள்ள விமல்வீரவன்ச முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய தருணத்தில் நிதியமைச்சர் வெளிநாடுகளிடம் நிதிபெறுவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காக குழுக்களை அமைத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
தீயநோக்கத்துடன் நிலைமை மோசமாவதற்கு நிதியமைச்சு அனுமதிக்கின்றது