November 21, 2024

மியன்மார் மன்னிப்பு வழங்கியுள்ளது!

சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் ஏழு இலங்கை மீனவர்களுக்கு மியன்மார் யூனியன் குடியரசு அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ளது.

மியன்மார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததால், ஏழு இலங்கை மீனவர்களுடன் கூடிய ‚துஷன் புதா‘ IMUL-A-0741NBO என்ற இலங்கை மீன்பிடிக் கப்பல் மியன்மார் அதிகாரிகளால் கடந்தாண்டு டிசெம்பர் 3ஆம் திகதி கைது செய்யப்பட்டது.

இதன் கீழ் குறித்த மீ்ன்பிடி கப்பலிக் கெப்டனுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அதே வேளை, கப்பல் குழுவினருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இலங்கை மீனவர்கள் யாங்கூனில் உள்ள இன்செயின் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்குத் தேவையான கொன்சியூலர் உதவிகளை மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் உதவியுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஒருங்கிணைத்து உதவியது.

இந்த நிலையில், மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள், 7 பேரும் மியன்மார் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், இந்த மாதம் 6ஆம் திகதி கட்டாய பி.சி.ஆர். பரிசோதனைகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ளனர் .

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert