November 21, 2024

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 21வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 21வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 27.02.2022 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஒல்னே சுபுவா (Aulnay Sous Bois) நகரசபை மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.அரங்க வாசலின் வரவேற்பு நிறைகுட விளக்குகளை திரு. திருமதி. தண்டாயுதபாணி செல்வரஞ்சன் தம்பதியினர் ஏற்றி வைத்தனர். தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவை தழுவிய மாவீரர்களின் நினைவாக பொதுச்சுடரினை தேசிய செயற்பாடடாளர் திரு. இமானுவேல் ரஞ்சித்குமார் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவீரர்களையும், போரினாலும், இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும், பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்களால் கொல்லப்பட்ட மக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு அரங்கநிகழ்வு ஆரம்பமாகியது.அரங்கின் மங்கள விளக்குகளை பிரதம விருந்தினர்கள், கழக உறுப்பினர்கள் மற்றும் நடன ஆசிரியர்கள் இணைந்து ஏற்றி வைத்தனர்.அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் கரவொலியுடன் பிரான்சில் புகழ்பூத்த 15 நடன ஆசிரியர்களின், 200க்கு மேற்பட்ட நடன மாணவ மாணவிகளின் 18 நடன வடிவங்கள் மேடையேற்றப்பட்டன. அனைத்து நடன மாணவ மாணவிகளும் ஓருவர்க்கு ஒருவர் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி குருவிற்கும், தமை ஈன்ற பெற்றோர்க்கும், தமிழினத்திற்கும் பெருமை சேர்த்தனர்.பரதவிழா இங்கு வாழும் எமது இளையோரின் முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே, பரதவிழாவினூடாக எமது தாயக உறவுகள் பயன்பெறுகின்றார்கள். அந்த பெருமையெல்லாம் நடன ஆசிரியர்களையும் , மாணவர்களையும் , பெற்றோரையும், வருகைதந்த மக்களையும், வர்த்தக ஆதரவாளர்களையும், தமிழர் புனர்வாழ்வுக்கழக தொண்டர்களையுமே சாரும்.இந்நிகழ்வில் இம்மேடையத் தந்தளித்த ஒல்னே சுபுவா (Aulnay Sous Bois) துணை நகரபிதா மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், சுவசி லூ ருவா (Choisy le Roi) நகரபிதா மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், லா கூர்நெவ் (La Courneuve) துணை நகரபிதா மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், நுவசி லு செக் (Noisy le Sec) நகரமன்ற உறுப்பினர், ரான்சி நகரமன்ற உறுப்பினர், குசன்வில் (Goussainville) நகரமன்ற உறுப்பினர், தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தக அதிபர்கள் மற்றும், தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள் நடன மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி உச்சாகப்படுத்தினர்.ஒலி ஒளி அருள் சொனோ திரு.அருளானந்தன், தொழில்நுட்ப உதவி திரு. ரவிகாந்த் ஆகியோர் வழங்க, ஆவணப் படப்பிடிப்பினை துலபன் வீடியோ நிறுவனமும், புகைப் படப் பிடிப்பினை தீபன் போட்டோ மற்றும் Frédéric Bidinger அவர்களும் பதிவுசெய்தனர். இந்நிகழ்வினை திரு. விநாயகமூர்த்தி, திரு. அருள்மொழித்தேவன், செல்வி. துளசி மற்றும் திருமதி. சுபா குருபரன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்ஒல்னே சுபுவா (Aulnay Sous Bois) நகரசபையின் ஆதரவில் இடம்பெற்ற பரதவிழா அரங்கம் நிறைந்த மக்களுடன் 20:00 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.ஒன்றிணைவோம் சேவை செய்வோம்தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert