November 22, 2024

ரஷ்ய விமானங்களுக்கு தடை விதித்த கனடா;

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகள் பல தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.

இந்நிலையில், பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் தங்கள் நாட்டின் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்திருந்தது.

இதற்கமைய, கனடாவும் தங்கள் நாட்டின் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்ற மோதலில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பல ஐரோப்பிய நாடுகள் இராணுவ உதவி வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளன.

இன்றையதினம் சில நாடுகளின் ஆயுத தளபாடங்கள் உக்ரைன் எல்லையை தாண்டியுள்ளன.

இந்நிலையில் தமது இராணுவ நடவடிக்கைக்கு எந்தவொரு நாடும் இடையூறு செய்தால் அணுவாயு தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

இந்நிலையில்,அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு விடுத்தும் மறுத்து வந்த உக்ரைன், பின்னர் பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளது.     

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert