உக்ரைன் அரசை மாற்றுவதே ரஷ்யாவின் இலக்கு – நேட்டோவின் பொதுச் செயலாளர்
உக்ரைன் அரசை மாற்றுவதே ரஷ்யாவின் இலக்கு என்று நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார்.
உக்ரைன் படையினர் தைரியமாகப் போராடுகின்றன. ரஷ்யப் படைகளுக்கு இழப்புக்கள் ஏற்படுவதை நாங்கள் பார்க்கின்றோம் என்றார்.
ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு விடையிறுக்கும் வகையில் அதன் கிழக்குப் பகுதியில் துருப்புக்கள் மற்றும் வான்படை மூலம் அதன் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக நேட்டோ தலைவர் கூறினார்.
நட்பு நாடுகள் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்திவிட்டதாகவும், நேட்டோ பதில் படையின் கூறுகளை நிலத்திலும், கடலிலும், வானிலும் நிலைநிறுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.
இதில் ஆயிரக்கணக்கான துருப்புக்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் 30 இடங்களில் உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன என்று ஸ்டோல்டன்பெர்க் கூறினார்.