86 உக்ரைன் படையினர் சரணடைந்தனர்!! கருங்கடலில் தீவைக் கைப்பற்றியது ரஷ்யா!
கருங்கடல் தீவை கைப்பற்றியதாக ரஷ்யா உரிமை கோருகிறது
உக்ரைனின் தலைநகர் கீய்வின் புறநகர் பகுதிகளில் கடுமையான தாக்குதல்களை ரஷ்யப் படைகள் முன்னெடுத்துள்ளனர். பல்குழல் ஏறிகணைத் தாக்குல்கள், டாக்கித் தாக்குல்கள், ஆட்டிலறி தாக்குதல்கள், கவசம்தாங்கிப் படைகளில் தாக்குல்கள் என குண்டு மழை பொழிவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
தலைநகர் கீய்வ்வை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறுவதாக அமெரிக்கா கூறுகிறது.
ஒடேசாவுக்கு தெற்கே கருங்கடல் தீவை கைப்பற்றியதாக ரஷ்யா உரிமை கோருகிறது
கருங்கடலில் உள்ள சிமீன்சி (Zmiinyi) தீவை தங்கள் படைகள் கைப்பற்றியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
அங்கு நிலைகொண்டிருந்த 82 உக்ரைன் வீரர்கள் ரஷ்யப் படைகளிடம் சரணடைந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒடேசா துறைமுக நகருக்கு தெற்கே உள்ள தீவில் நிறுத்தப்பட்டிருந்த 13 எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரஷ்ய போர்க்கப்பலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.