20வருடங்கள்:நிமல் கொலையாளி நெப்போலியன் கைது!
பிபிசி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை தொடர்பில் சந்தேகநபரான நெப்போலியனை ஒருவரை பிரிட்டனில் காவல்துறை கைதுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈபிடிபி அமைப்பின் முன்னாள் இராணுவ தளபதியென சொல்லப்பட்ட நெப்போலியன் என்பவரே கைதாகியுள்ளார்.
முன்னர் இலங்கையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பி;ல் இடம்பெறும் விசாரணைகளின் ஒரு பகுதியாக மேலதிக தகவல்களை வழங்குமாறு பிரிட்டனின் காவல்துறை கோரியுள்ளது.
செவ்வாய்கிழமை சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் .சர்வதேகுற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001இன் 51 வது பிரிவின் கீழ் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக சந்தேகநபர் கைதுசெயயப்பட்டிருந்தார்.
2000ம் ஆண்டு பத்திரிகையாளர் நிமலராஜன் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே இந்த கைதுஇடம்பெற்றது எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிமலராஜன் கொலை தொடர்பில் தேடப்பட்ட நிலையில் இந்தியாவினூடாக தப்பித்த நெப்போலியன் லண்டனில் வாழ்ந்து வந்திருந்ததாக தெரியவருகின்றது.
ஏற்கனவே வேலணையில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலைகளை அரங்கேற்றியதாகவும் நெப்போலியன் தேடப்பட்டுவந்திருந்தார்.
இதனிடையே போலிப்பெயர் ஒன்றில் அண்மையில் சுமார் 20 வருடங்களின் பின்னராக நெப்போலியன் இலங்கை வந்து திரும்பியிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.