தலையிட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நோிடும்: மேற்கு நாடுகளை எச்சரித்தார் புடின்!!
உக்ரைன் மீதான சிறப்பு இராணுவ நடவடிக்கையை ரஷ்ய அதிபர் புடின் இன்று வியாழக்கிழமை தொலைக்காட்சி உரை ஒன்றின் மூலம் அறிவித்தார்.
உள்ளூர் நேரப்படி 5.55 மணியளவில் இந்த அறிவிப்பு வந்தது
ரஷ்ய இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து உக்ரைன் விவகாரங்களில் தலையிடும் எந்தவொரு முயற்சியும் அவர்கள் பார்த்திராத விளைவுகளை ஏற்படுத்தும் என மேற்கு நாடுகளை புடின் எச்சரித்தார்.
குறிப்பாக ரஷ்ய விவகாரங்களிளோ அல்லது எங்களுடைய நாட்டுக்கும், எங்களுடைய மக்களுக்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், அதற்கு ரஷ்யா உடனடி பதிலடி கொடுக்கும் என அவர்கள் தெரிந்திருக்க வேண்டும் அதன்பின், உங்களுடைய வரலாற்றிலேயே இதற்கு முன்பு நீங்கள் சந்தித்திராத கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனை ஆக்கிரமிக்கத் திட்டமிடவில்லை. உக்ரைன் படையினர் ஆயுதங்களைக் கீழு போட்டு விட்டு வீடு செல்ல வேண்டும் என்று உரையில் குறிப்பிட்டார்.
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் உரையாற்றிய சில நிமிடங்களில் உக்ரைனிய இராணுவ தளங்கள் , விமானத் தளங்கள், கடற்படைத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டன.
தலைநகர் கியேவ், இவ்வினோ பிரான்கிவ்ஸ்க், கார்கிவ், கரமடோர்ஸ்க், டினிப்ரோ, மரியுபோல், ஒடேசா ஆகிய நகரங்களில் அமைந்துள்ள இராணுவ , வான்படை, கடற்படை இலங்குகள் ரஷ்யாவால் குறிவைத்து ஏவுகணைகளால் தாக்கப்பட்டன.
உக்ரைனின் கடற்படைத் தளம் , துறைமுகம்கள் அமைந்த மரியுபோல், ஒடேசா கடற்பரப்பில் அனைத்து கப்பல் போக்குவரத்துகள் ரஷ்யாவால் நிறுத்தப்பட்டு முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது. எந்த ஒரு வணிகக் கப்பல்களும் அப்பகுதியால் பயணிக்க ரஷ்யா தடை விதித்துள்ளது.
ரஷ்ய எல்லைகள் மற்றும் பெலாரஸ் உட்பட வடக்கு, தெற்கு மற்று கிழக்கு எல்லைகளிலிருந்து இராணுவ வாகனங்கள் உக்ரைனுக்குள் நுழைந்தன.
குண்டு மழையைத் தொடர்ந்து மக்கள் நிலக்கீழ் தொடருந்து நிலையங்களில் தங்களது உயிர்களைப் பாதுகாக்க தஞ்சம் அடைந்து வருகின்றனர்.