November 21, 2024

டென்மார்க்கில் நடைபெற்ற மாலதி கிண்ண உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022

கடந்த சனிக்கிழமை (19.02.2022) அன்று டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் 15ஆவது உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியானது இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் நினைவாக வருடா வருடம் நடாத்தப்படும் போட்டியாகும்.

ஆயினும்  கொரோணா நெருக்கடியினால் சென்ற ஆண்டு நடத்த முடியாதுபோன இச்சுற்றுப் போட்டியானது இம்முறை கூடுதலான அணிகளின் பங்கேற்போடு கூடுதல் பார்வையாளர்களின் வருகையுடன் மிக உச்சாகமாக நடை பெற்றிருந்தது.  

போட்டியானது தாயக மீட்பு போரில் உயிர்நீத்த மாவீரர்களையும் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கத்தை செலுத்திக்கொண்டு, மாலதி தமிழ்க் கலைக்கூட கீதம் ஒலிபரப்பியதை அடுத்து  கலைக்கூட மேலாளர் தில்லைநடராசாஅருளானந்தராசா அவர்களின் உரையோடு, விளையாட்டு வீரர்களுக்கான போட்டி விதிமுறைகளை வழங்கிகொண்டு அரங்கு விளையாட்டு வீரர்களுக்கு இடம் கொடுத்தது. 

இரு மைதானங்களில் மிக விறுவிறுப்பாக  நடைபெற்ற போட்டிகளில் கலைக்கூட மாணவர்கள், பழையமாணவர்கள், இளையவர்கள் மற்றும் பெண்கள் உள்ளடங்கிய பல அணிகள் பங்கேற்று சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இச் சுற்றுப் போட்டியின் இறுதியில் பங்கேற்ற அணைத்து வீரர்களுக்கு பதக்கங்கள் அணிவித்ததோடு முதல் மூன்று  இடங்களை பெற்றுக்கொண்ட அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற அணிகள் பின்வருமாறு:

ஆண்டு 2010-2012:

மூன்றாம் இடம் :- Herning/Randers
இரண்டாம் இடம்:- Helsingborg
முதலாம் இடம்:- Holbæk 

ஆண்டு 2008-2009:

மூன்றாம் இடம:- Helsingør
இரண்டாம் இடம்:- Grindsted
முதலாம் இடம்:-  Skjern

ஆண்டு 2006-2007:

மூன்றாம் இடம் :- Århus
இரண்டாம் இடம்:-Struer
முதலாம் இடம்:- Helsingør

ஆண்டு 2004-2005:

மூன்றாம் இடம் :- Grindsted
இரண்டாம் இடம்:- Herning
முதலாம் இடம்:-  Skjern

பெண்கள்:

மூன்றாம் இடம் :- Horsens
இரண்டாம் இடம்:-Dantam
முதலாம் இடம்:- Randers

ஆண்கள்:

மூன்றாம் இடம் :-Vejle/Horsens
இரண்டாம் இடம்:- TFC Fredricia
முதலாம் இடம்:- Dantam IF

வெற்றி கிண்ணங்கள் வழங்கியதை அடுத்து ‚தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்‘ எனும் உறுதி ஏற்புடன்  நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert