இறங்கி வந்தார் கோத்தா!
பொருளாதார நெருக்கடிகளால் கொழும்பு ஆட்சி ஆட்டம் பெற்றுள்ள நிலையில் இலங்கையில் உள்ள சிறந்த 20 நிறுவனங்கள் நாளை (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்கவுள்ளன.
இதன்படி, வர்த்தக சமூகத்தின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை நேரடியாக நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதியுடன் சந்திப்பில் கலந்துகொள்ள இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், தலைவர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தனியார் துறை இருக்கும் பட்சத்தில் எந்தவொரு அரசாங்கத்தாலும் வர்த்தக சமூகத்தைத் தவிர்த்து நாட்டை நிர்வகிப்பதைத் தொடர முடியாது.