உக்ரைன் பதட்டங்கள்: ரஷ்யாவின் கோரிக்கைகள் பனிப்போருக்குத் திரும்புகின்றன ஜேர்மனி எச்சரிக்கை!
பனிப்போர் கால இராஜதந்திரத்தால் சமாதானத்தை ரஷ்யா ஆபத்தில் கொண் செல்வதாக ஜேர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் நெருக்கடியை தணிப்பதற்கு விரிவான நடிவடிக்கையை எடுக்குமாறு ரஷயா வலியுறுத்தியுள்ளது.
உக்ரைனுடனான அதன் எல்லைக்கு அருகிலும், ரஷ்ய கூட்டாளியான பெலாரஸ் உடன் உக்ரேனை மூன்று பக்கங்களிலும் சுற்றி வளைத்துள்ள ரஷ்யா இராணுவத்தையும் இராணுவ தளபாடங்களையும் பாரியளவில் கட்டியெழுப்புவது குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு உலகத் தலைவர்கள் சந்திக்கும் வருடாந்திர மியூனிக் பாதுகாப்பு மாநாட்டிற்கு முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே ரஷ்யா ஐரோப்பிய அமைதி ஒழுங்கின் அடிப்படைக் கொள்கைகளுக்கு சவால் விடுகிறது என்று அவர் எச்சரித்தார்.
ரஷ்யா தனது சொந்த செல்வாக்கு மண்டலத்திற்குள் இருக்கும் நாடுகளில் மேற்கத்திய இராணுவ சக்தியை கட்டுப்படுத்த முற்படும் ஐரோப்பிய பாதுகாப்பு தொடர்பாக ரஷ்யா விடுத்துள்ள கோரிக்கைகளின் தொடர்ச்சியை அவரது கருத்துக்கள் குறிப்பிடுகின்றன.
உக்ரைன் நெருக்கடி தொடர்பில் இராஜதந்திரம் தொடர அவர் அழைப்பு விடுத்தார். போரை நோக்கிய பெரிய படிகளை விட அமைதிக்கான சிறிய படிகள் கூட சிறந்தவை என்று அவர் மேலும் கூறினார்.
பனிப்போரின் போது சோவியத் யூனியன் செய்தது போல், அதன் எல்லைகளுக்கு அருகில் உள்ள நாடுகளின் வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்கு செலுத்த ரஷ்யாவிற்கு உரிமை உண்டு என்ற கருத்தை மேற்கு நாடுகள் நிராகரிக்கின்றன.
பனிப்போர் என்பது 20 ஆம் நூற்றாண்டின் போருக்குப் பிந்தைய காலகட்டம், மேற்கத்திய நாடுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான போட்டி இரண்டு உலகளாவிய வல்லரசுகளை அணு ஆயுதப் போரின் விளிம்பிற்குக் கொண்டு வந்தது.
உக்ரைன் மீது படையெடுப்பதற்கான நியாயத்தை ரஷ்யா முன்வைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்ததை அடுத்து இக்கருத்தை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
ஜோ பிடன் இராணுவ நடவடிக்கை உடனடியாக தொடங்கலாம் என்று கூறினார், ஆனால் இராஜதந்திர தீர்வு இன்னும் சாத்தியம் என்று வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்று ரஷ்யா கூறியது. அத்துடன் அமெரிக்கா பதட்டங்களைத் தூண்டுவதாக குற்றம் சாட்டியது ரஷ்யா.
மொஸ்கோ இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறது மேலும் சில துருப்புக்கள் சமீப நாட்களில் அவர்களின் நிரந்தரத் தளங்களுக்குத் திரும்பிச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
படைகள் திரும்பிச் சென்றதற்கான எந்த ஆதாரங்களையும் நாங்கள் காணவில்லை என மேற்கு நாடுகள் தெரிவித்துள்ளன.