திருமலையில் இந்தியாவிற்கு போட்டியாக சீனா?
திருகோணமலை அரச வைத்தியசாலையை அகற்றி அவ்விடத்தில் சீன நிறுவனத்தின் சங்கரி லா ஹோட்டலை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இன்று திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் திருகோணமலையில் தமிழ் மக்களின் பரம்பலை குறைக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருகிறது.
திருகோணமலையில் சில பகுதிகளை அனுராதபுரத்துடன் இணைக்கும் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக நகருக்குள் இருக்கும் அரச வைத்தியசாலையை திருகோணமலை காட்டுப்பகுதியை அண்டிய சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை அண்மித்த பகுதியில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதெனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார்.