கொழும்பில் உயிரை பறிக்கும் ஆபத்தான வாழைப்பழம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை!!!

bananas, many, banana, fruit, background, fresh, market, ripe, bunch, food, healthy, yellow, tropical, stack, organic, color, closeup, natural, diet, agriculture, snack, ingredient, objects, sale, product, lot, pattern, health, lifestyle, macro, sweet, group, pile, heap, grocery, fruits, lots, bunches, beautiful, eat, vegetarian, horisontal, burlap
கொழும்பில் உயிரை பறிக்கும் ஆபத்தான வாழைப்பழம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை!!!
புறக்கோட்டை மெனிங் சந்தையில் பச்சை வாழைப்பழங்களை 2 மணித்தியாலங்களில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
மிகவும் ஆபத்தான இரசாயனங்களைப் பயன்படுத்தி பச்சை வாழைப்பழங்கள் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை மெனிங் சந்தையில் இடம்பெறும் இந்த சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் எந்தவொரு அதிகாரியும் இதுவரையிலும் அவதானம் செலுத்த வில்லை என தெரியவந்துள்ளது.
முதலில் பச்சை நிறத்தில் காணப்படும் வாழைத்தார்களுக்கு மிகவும் ஆபத்தான இரசாயனத்தை தெளித்து அதனை தொங்க விடுவதாகவும் இரண்டு மணித்தியாலங்களில் வாழைக்காய் வாழைப்பழமாக மாறிவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.
ஊடகமொன்று வழங்கிய தகவலுக்கமைய அங்கு சென்ற அதிகாரிகள் இரசாயன போத்தல்கள் சிலவற்றை மீட்டுள்ளனர்.
இது பொது மக்களின் உயிரை பறிக்கும் செய்களில் ஒன்று என உணவு தர நிலை பரிசோதிக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல இடங்களில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மெனிங் சந்தையில் மொத்தமாக கொள்வனவு செய்யப்படும் வாழைப்பழங்கள் கொழும்பின் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.