உக்ரைனில் உள்ள 150 படையினரை வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவு!
உக்ரைனில் உள்ள 150 அமெரிக்கப் படையினரை எச்சரிக்கையாக நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் காரணமாக உக்ரேனியப் படைகளுக்க பயிற்சி அளிப்பதற்காக உக்ரைனில் உள்ள புளோரிடாவை தேசிய பாதுகாப்பை சேர்ந்த 150 படையினர் அமெரிக்காவால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இவர்களையே வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள சில அமெரிக்க தூதரக ஊழியர்களை வெளியேறுமாறு வெளியுறவுத்துறை உத்தரவிட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டடுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ரொயிட்டர் செய்தி நிறுவத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகியவை சனிக்கிழமையன்று தங்கள் குடிமக்களை உக்ரைனை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளன.