சிங்கள மீனவருக்கு இந்திய படகுகள் அன்பளிப்பு!
கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களது படகுகளை சிங்கள மீனவர்களிற்கு இலங்கை கடற்படை தாரை வார்த்தமை அம்பலமாகியுள்ளது.
இலங்கை கடற்படையால் 2011 இல் இருந்து 2022 ஆம் ஆண்டு பெப்ரவரு 8ஆம் திகதி வரை 661 படகுகள் சிறைபிடிக்கப்பட்டது. இதில் 582 படகுகளை மீள தமிழ்நாட்டிற்கு பயணிக்க நீதிமன்றங்கள் விடுவித்தன. அவ்வாறு விடுவிக்கப்பட்ட படகுகளில் தமிழக மீனவர்கள் 445 படகுகளை எடுத்துச் சென்றனர்.
இதன்பின்பும் 216 படகுகள் இலங்கையில் இருந்தன. இதேநேரம் நீதிமன்றம் விடுவித்த 582 படகுகளில் தமிழகம் சென்ற 445 படகுகள் போக மிகுதியான 137 படகுகளிலும் 12 படகுகள் மிகவும் தரமானவையாக எந்தவொரு பழுதும் அற்ற படகுகளாக காணப்பட்டது. எஞ்சிய 125 படகுகளில் உடைந்தவை பழுதடைந்து சேதமடைந்தவையும் காணப்பட்டன.
இதேநேரம் இறுதி ஆண்டுகளில் கைப்பற்றி வழக்கு நடவடிக்கையில் இருந்த 79 படகுகளுடன் மொத்தம் 216 படகுகள் இறுதியாக இலங்கையில் இருந்தன என்று தமிழக மீனவ அமைப்புக்கள் உறுதி செய்கின்றன. இதற்காகவே தற்போது இந்தியப் படகுகள் ஏலம்விடப்பட்டதே 47 படகுகளின் உண்மையை கண்டறியக்கூடாது என்பதற்காகவே இந்த ஏலமுயற்சி இடம்பெற்றது என்கின்றனர்.