டென்மார்க் மண்ணில் அமெரிக்கத் துருப்புக்களை அனுமதிக்கலாம் – பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன்
டென்மார்க் மற்றும் அமெரிக்காவின் டென்மார்க்கில் அமெரிக்க வீரர்கள் தங்குவதற்கும் மற்றும் இராணுவ தளபாடங்களை நிலை நிறுத்தவும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் சலுகையுடன் அமெரிக்கா டென்மார்க்கை அணுகியுள்ளது என்று டென்மார்க் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன் இன்று வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
புதிய டேனிஷ்-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் பல தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு திருப்புமுனையாகும் என்று அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான தற்போதைய நெருக்கடியால் இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் துரிதப்படுத்தப்படவில்லை என்று டென்மார்க் பிரதமர் மேலும் கூறினார்.