November 22, 2024

முன்னேற்றம் போதாதென்கிறது ஜரோப்பிய யூனியன்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை சர்வதேச நெறிமுறைகளுடன் முழுமையாக இணங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

 பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை தொடர்ந்து குறைக்குமாறு இலங்கையை வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை குற்றச் சாட்டுகள் இன்றி பிணையில் விடுவிப்பதற்கான நடைமுறை மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்றுமாறும் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆகியவற்றின் கூட்டு ஆணைக்குழுவின் 24வது கூட்டம், கடந்த 8ஆம் திகதி பிரஸில்ஸில் இடம்பெற்றபோதே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, அளவிடக்கூடிய, உறுதியான மற்றும் சரிபார்க்கக்கூடிய முடிவுகளை அடைவதற்காக கடமைகளை நிறைவேற்றுவதற்கான அடிப்படை நோக்கத்தை இலங்கை மீண்டும் வலியுறுத்தியது 

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் இலங்கை அரசாங்கம் திருத்தங்களை மேற்கொண்டுள்ளமையை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது.

எனினும், வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திருத்தச் சட்டத்தில் முக்கியமான கூறுகள் உள்ளடக்கப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert