November 22, 2024

முன்மாதிரியானது உடுப்பிட்டி!

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களிற்கு அவர்கள் தமது கல்வியினை முழுமையாக பூரணப்படுத்தும் வரையான தொடர்ச்சியான புலமைப்பரிசில் வழங்கும் திட்டமொன்றை முன்மாதிரியாக அமுல்படுத்தியுள்ளது உடுப்பிட்டி நலன்புரிச்சங்கம் எனும் பொது அமைப்பு.

உடுப்பிட்டி பகுதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மாணவர்களிற்கு சாதாரண தர மற்றும் உயர் தர கற்கைகளை பூர்த்தி செய்யவும் அதே போல மருத்துவபீடம்,பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களிற்கும் கற்கைகளை பூரணப்படுத்தவும் புலமைப்பரிசில் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர் உடுப்பிட்டி வாழ் மக்களது பங்களிப்புடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை உடுப்பிட்டி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கரவெட்டி பிரதேச  செயலர் ஈ.தயாரூபன் புலமைப்பரிசில் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்திருந்தார்.

மாணவர்களிற்கான முதலாம் மாதத்திற்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு உதவிகள் நேற்றைய நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ளுர் இளைஞர் யுவதிகளிற்கு வேலை வாய்ப்பினை வழங்கவென உடுப்பிட்டி வல்லையில் பல கோடி முதலீட்டில் இலங்கை நெய்தல் நூற்றல்   ஆலை எனும் ஆடைத்தொழிற்சாலையினை நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert