நேட்டோவின் பொதுச் செயலாளர் நோர்வே மத்திய வங்கியின் ஆளுநர் ஆகிரார்
முன்னாள் நோர்வேயின் பிரதமரும் தற்போதைய நேட்டோவின் பொதுச்செயலருமான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் நோர்வேயின் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்றவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
உக்ரைன் தொடர்பாக மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நேட்டோவின் பொதுச் செயலாளர் பதவியில் அவரது காலம் முடிவடையும் நிலையில் நோர்வேயில் அவர் டிசம்பர் மாதம் முதலாம் நாள் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.
62 வயதான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் நோர்வேயில் இரண்டு முறை பிரதமாராக பணியாற்றினார்.
2014 ஆம் ஆண்டு நேட்டோவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். முதல் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் அவர் அப்பதவியில் நீடிப்பு செய்யப்பட்டார்.
நேட்டோவின் எனது பதவிக் காலம் முடிவடையும் வரை எனது பலத்தையும் கவனத்தையும் நேட்டோ கூட்டணின் தலைமையின் மீது பயன்படுத்துவேன் என்று அவர் காணொளி ஒன்றில் கூறியுள்ளார்.