யாழில் போராடத்தடை!
இந்திய மீனவர்களது அத்துமீறல் மற்றும் இலங்கை அரசின் பொறுப்பற்றதன்மைக்கெதிரான மீனவர்களது போராட்டத்திற்கு அரசு தடைவிதித்துள்ளது.
பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் நடைபெறும் மீனவர் போராட்டத்திற்கு நீதிமன்றத்தின் ஊடாக இலங்கை காவல்துறையினர்; தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மீனவர்களை போராட்ட களத்திலிருந்து வெளியேற இலங்கை காவல்துறை வலியுறுத்திவருகின்ற நிலையில், தமது போராட்டத்தினைக் கைவிடப்போவதில்லை என்று மீனவர்கள் தெரிவித்துவருகின்றனர்.
பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மீனவர்களால் வீதியை மறித்து மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வீதியை மறித்து மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுப்பதனால் வீதி ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது , பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் , கொரோனா அபாயம் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி இலங்கை காவல்துறை தடை கோரியிருந்தது.
இதனை அடுத்து மீனவர்களின் போராட்டத்திற்கு நீதிமன்று தடை விதித்து கட்டளைபிறப்பித்துள்ளது.