November 21, 2024

யூடியூப் தளத்தில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிஅவர்கள், யூடியூப் தளத்தில் 1 கோடி பயனர்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளார். பிரதமர் மோடியின் ‘நரேந்திர மோடி’ என்ற யூடியூப் சேனலில் சுமார் 10 மில்லியன் பயனர்களை அவர் பெற்றுள்ளார்.

இவர் உலக நாடுகளின் தலைவர்களில் யூடியூப் தளத்தில் அதிக பயனர்களை பெற்ற தலைவராக தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.கடந்த 2007-இல் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது மோடி இந்த சேனலை உருவாக்கியிருந்தார்.

பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் உடனான நேர்காணல் மற்றும் கொரோனா பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் குறித்த வீடியோக்கள் இந்த சேனலில் பிரபலம்.

மேலும் பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் 1,643,140,189 வியூஸ்களை பெற்றுள்ளது. கடந்த 2019-இல் ‘நரேந்திர மோடி’ சேனலை 70 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்திருந்தனர்.

அதேபோல் மோடிக்கு அடுத்ததாக பிரேசில் ஜனாதிபதி சயீர் பொல்சனாரூ, யூடியூப் தளத்தில் 36 இலட்சம் சந்தாதாரர்களை பெற்றுள்ளார். மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர், 30.7 இலட்சம் சந்தாதாரர்களை பெற்றுள்ளார்.

இந்தோனேசிய ஜனாதிபதி 28.8 இலட்சம் சந்தாதாரர்களையும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 7.043 இலட்சம் சந்தாதாரர்களையும் பெற்றுள்ளனர்.

தற்போது பிரதமர் மோடியை ட்விட்டரில் 7.53 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் 6.5 கோடி பேரும், முகநூலில் 4.6 கோடி பேரும் பின்தொடர்ந்து (Followers) வருகின்றனர். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert