இந்திய மீனவர்கள் பற்றி சுட்டிக்காட்டு!
இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களின் விடயத்தை ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அனா சிங்கர் அம்மையாரிடம் தமிழ் தரப்புக்கள் விளக்கியுள்ளன.
இரு நாள் பயணமாக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அனா சிங்கர் அம்மையார் இன்று மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை நாவலர் வீதியில் உள்ள இல.386இல் அமைந்துள்ள யு.என் மாவட்ட அலுவலகத்தில் சந்தித்தார்.
த.தே.கூட்டமைப்பு மற்றும் த.தே.ம.முன்னணி நாடாளுன்ற உறுப்பினர்களுடன் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராயா ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது த.தே.ம.முன்னணியின் நாடாளுன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் இந்திய மீனவர்களின் மோசமான செயல்களை தடுத்து நிறுத்த இலங்கை அரசின் கடற்படை எந்தவிதமான உதவிகளையும் செய்யாமல் மாறாக ஒத்துழைக்கின்றனர்.
எமது மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு கடலிற்கு சென்றால் பாஸ் மற்றும் சோதனையில் ஈடுபடும் கடற்படை அவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை அழிக்கும் செயல்களிலேயே ஈடுபடுகின்றது என்பதனையும் அம்மையாரிடம் சுட டிக்காட்டியுள்ளோம் என்றனர்.