ரஷ்யாவின் தாக்குதல் பயங்கரமானதாக இருக்கும் – அமெரிக்க உயர் படைத்தளபதி எச்சரிக்கை!!
உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்குமானால் அது பயங்கரமானதும் கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என அமெரிக்க உயர்மட்ட ஜெனரல் மார்க் மில்லி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் எல்லைக்கு அருகே 100,000 ரஷ்ய துருப்புக்கள் குவிக்கப்பட்டதை பனிப்போருக்குப் பிறகு மிகப்பெரியதாக ஜெனரல் மில்லி விவரித்தார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறுகையில்,
இராஜதந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மோதலைத் தவிர்க்க முடியும்.
உக்ரைனுடனான அதன் எல்லைக்கு அருகே ரஷ்யாவின் படைகளின் தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.
நெருக்கமான கட்டங்கள் உள்ள நகர்ப்புறங்களில் சண்டையிடுவது மிகவும் பயங்கரமானது என ஜெனரல் மில்லி மேலும் கூறினார்.