November 23, 2024

நிவாரண பொதியோடு இலங்கை நீதி அமைச்சர்!

 காணாமால் போனோருக்கு நிவாரணம் வழங்குவதை தவிர வேறு எதற்கும் இலங்கை அரசு தயராகவில்லையென்பது அப்பட்டமாகியுள்ளது.

காணாமல்போனவர்களிற்கு யார் காரணம் என எனக்குத் தெரியாது என  நீதி அமைச்சர் அலிசப்ரி இன்று யாழில்  தெரிவித்தார்.

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட நீதி அமைச்சர் அலிசப்ரியிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டம் தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் நீதி அமைச்சர் தொடர்ந்தும் விபரம் தெரிவிக்கையில், காணாமல்போனவர்கள் நேற்றைய தினம் முல்லைத்தீவில் போராடியபோதும் ஐவரை பேச அழைத்தேன். அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை.

போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்று விடமுடியாது.

காணாமல் ஆக்கப்பட்டோர்  தமது பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசுடன் பேசினால் அதற்குரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும். 

வடக்கு மாகாணத்தில் காணாமலாக்கப்பட்டோர் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் எமது நிகழ்வு நடக்கும் இடத்தின்  முன்றலிலும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் 

நேற்றைய தினம் நான் முல்லைத்தீவு  நிகழ்வில் கலந்து கொண்ட போதும் நான் கலந்துகொண்ட நிகழ்வு முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களை நான் சந்திக்க அழைத்தேன் ஆனால் அவர்கள் கூறினார்கள் நாங்கள்  சந்திக்க விரும்பவில்லை என்று எனவே அதிலிருந்து 

நான் ஒன்றை  புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.  அவர்கள் போராட்டத்திற்காகவே வந்திருக்கின்றார்கள்.

அவர்களுக்கு பிரச்சனைக்குரிய தீர்வு தேவையில்லை. அவர்களுக்கு போராட்டத்தின் மூலம்  தீர்வு  கிடைக்காது 

கடந்த 13 வருடங்களாக  போராட்டங்களை மேற்கொண்டு அவர்களுக்கு என்ன தான் கிடைத்தது.  போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் எதையும் அவர்கள் பெற்றுக் கொள்ள முடியாது.  குறிப்பாக இயக்கங்களில் இருந்தவர்களின் உயிரை மீட்டுத் தருமாறு கூறினால் அதை பெற்றுக் கொடுக்க முடியாது தானே அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  ஆனால் இந்த காணாமல் ஆக்கப்பட்ரோரது  ஒரு  பிரச்சினைக்கு  தீர்வு வழங்க வேண்டும் அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

நீதி அமைச்சர் என்ற ரீதியில் நான் ஒன்றை கூறி வைக்க விரும்புகின்றேன்  காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமானால் அது அரசுடன் பேசித்தான் அதற்குரிய தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர போராட்டங்களை மேற்கொண்டு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாது.

போராட்டங்களை மேற்கொள்வது அவர்களுடைய ஜனநாயக உரிமை அதனை மதிக்கின்றேன் அதனை தடுக்க மாட்டேன் ஆனால் போராட்டங்களை நடத்தி எதனையும் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert